இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. ஆனால் மழையால் பாதிக்கப்பட்டு இப்போட்டி கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஜூலை 4-ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
டி 20 போட்டிகளை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்காக ஏற்கனவே சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம் : ஹாரி ப்ரூக் (C), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தல், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கர்ரன், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், ஜோ ரூட், ஜோஷ் டங்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கான முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 14 அன்று எட்ஜ்பாஸ்டனி நடைபெறுகிறது.




