முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தவெக கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் “எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி போலீசார் நெருக்கடி தருகிறார்கள். தவெகவில் சேரச்சொல்லி நிர்பந்திக்கிறார்கள். நான் ராஜினாமா செய்ய மாட்டேன். திமுகவில் உறுதியாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.




