தமிழ் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி காலையில் புதுச்சேரியில் அரசு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து அங்கிருந்து மதுரை வந்த பிரதமர் மதுரை விமான நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த மத்திய அரசு விழாவில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி, ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முருகனை தரிசனம் செய்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முருகனை வழிபட்ட பிறகு திருப்பரங்குன்றத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகருக்குப் புறப்பட்டார்.








