மதுரை மண்டேலா நகர் சந்திப்பு அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
எங்கள் கூட்டணியில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி இணைந்துள்ளன. 234 தொகுதிகளிலும் தேனீக்கள் போல உழைத்து அனைவரும் வெற்றி பெற வைக்க வேண்டும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை சட்டமன்ற உறுப்பினராக்கி முதலமைச்சராகியது தென் மாவட்டம் தான். அம்மா அவர்கள் முதன்முறையாக போட்டியிட்டதும் தென் மாவட்டத்தில் தான். ஆகவே தென் மாவட்டத்தை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக உள்ளது.
மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!
தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக அளவிலே இடத்தை கொடுத்து அதிமுக ஆட்சி அமைக்க தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள் அதிமுகவை ஜாதிக்கும் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இயக்கம் அதிமுக. பொன்விழா கண்ட கட்சி அதிமுக.
பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன் தான் இந்திய நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்திய நாட்டின் வளர்ச்சி பார்க்கப்படுகிறது.
மத்தியில இருக்கும் ஆட்சியாளர்களால் தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். மேடைக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் 4400 கோடியை வளர்ச்சி திட்டங்களுக்காக கொடுத்துவிட்டு தான் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்
ஸ்டாலின் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் பரப்பி வருகிறார்க. மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் என்ன..?
காற்று கண்ணுக்கு தெரிகிறதா அந்த காற்றில் கூட ஊழல் செய்கின்ற கட்சி திமுக. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக கட்சி. சர்க்காரியா கமிஷன் தெளிவுபடுத்தியது . ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்.
அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் வழங்கவில்லை என ஸ்டாலின் கூறுகிறார் தென் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம். பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். 11 உரையாண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மருத்துவ கல்லூரிகளை கூட கொண்டு வர முடியவில்லை
இவ்வாறு அவர் பேசினார்.







