ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை

ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இனிமேல் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்தால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி…

ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இனிமேல் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்தால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல முனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், கடவூர் சிந்தாமணிப்பட்டி ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருவிழா வருகிற 06.06.23 முதல் 08.06.2023 வரை நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆடல்,பாடல் மற்றும் கரகம் பாவித்தல்
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இம்மனு நீதிபதிகள் சுப்ரமணியன்,விக்டோரியா கௌரி ஆகியோரை உள்ளடக்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.விசாரணையின்போது அரசு தரப்பில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.இதனை கேட்ட நீதிபதிகள் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி முதலில் காவல் நிலையத்தில் மனு அளிக்க வேண்டு.மனு அளித்த ஏழு நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டதா?இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஆனால் மனுதாரர்கள் இதனை பின்பற்றாமல் பொதுநல வழக்கு தாக்கல்
செய்துள்ளனர். எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.மேலும் இதுபோன்ற பொதுநல வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.