பூசாரிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுாரை அடுத்த பூசாரிபட்டி தாச சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு துாங்கச் சென்றுள்ளார். அப்பொழுது 11 மணியளவில் வெளியில் சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது அவருடைய இருசக்கர வாகத்திலுள்ள பெட்ரோலை வாலிபர் ஒருவர் திருடிக்கொண்டு இருந்தார்.
இதனைக்கண்டு அவர் அந்த வாலிபரை பிடித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் வாலிபர் காங்கியானுர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருடைய மகன் விக்னேஷ் என தெரியவந்தது. இதனையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அனகா காளமேகன்






