25.5 C
Chennai
September 24, 2023
தமிழகம் செய்திகள்

கோயில் வருமானத்தில் மாநில அரசின் உரிமை, மத்திய கணக்குத் துறை தணிக்கையால் பறிக்கப்படாது -உயர்நீதி மன்றம்

கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு 2021-ஆம் ஆண்டு ஜீன் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.  இதில் சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய கோரியும், விளக்கம் கேட்டும் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள், கோவில்களையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டுமென கூறப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீர்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என சட்டம் இயற்றும்படி நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளார்.  அதேபோல் கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது எனவும், தற்போது மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், கோயில் அறங்காவலராக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.  அறங்காவலர்களின் நியமனம் பக்தர்களின் பங்களிப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டு, அரசின் மறு ஆய்வு மனுவை முடித்துவைத்துள்ளனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

அட என்ன இப்படி பயப்புடுறீங்க…. அஸ்வின்’ஸ் திரைப்பட விமர்சனம்…

Web Editor

சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy

பட்ஜெட் ஒரு டிஜிட்டல் ‘டிமிக்கி’: ஜெயக்குமார்

G SaravanaKumar