மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி!

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மதுரை காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாடு முழுவதும் மக்களவைத்…

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மதுரை காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி (19.04.2024) தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக 19-ம் தேதி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால், தேர்தல் களம் அதிரடியாக சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுக்கூட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், தங்களின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்தும் கட்சி தலைவர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் உள்ள காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த பகுதிகளில் வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.