சீர்காழி சுன்னத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி!

சீர்காழியில் சுன்னத் ஜமாஅத் சார்பில் ரமலான் நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில், புனித ரமலான் நோன்பின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.…

சீர்காழியில் சுன்னத் ஜமாஅத் சார்பில் ரமலான் நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில், புனித ரமலான் நோன்பின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூசுப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு அனைத்து ஜமாஅத் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அஸ்லம் நிஜாமி திருமறை குர்ஆன் வசனம் ஓதினார். அல்ஹூதா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா பக்ருதீன் ஆலிம், சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் அப்துல்லாஷா, பெஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜ்கமல், மருத்துவ சேவகர் கஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மயிலாடுதுறை மாவட்ட அரசு காஜி, நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லானா முஹம்மது இஸ்மாயீல் ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்.

நகர்மன்ற உறுப்பினர் முபாரக் அலி, பாரூக் மாவட்ட அரிமா சங்க தலைவர் சக்திவீரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய வணிக பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.