தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்..!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக லயோலா மணியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்  தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இந்த கழகம் கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் செயலபட்டு வருகிறது.

இக்கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தவெக ஆட்சி பொறுபேற்றதை தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பாடநூல் கழகத் தலைவராக நியமிகப்பட்டுள்ள லயோலா மணிக்கு முதலமைச்சர் விஜய் நியமன ஆணையை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் இருந்தார்.

யார் இந்த லயோலா மணி?

தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளராகவும் கொள்கை பரப்பு இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தவெக சார்பில் பங்கேற்று பேசி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.