தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் இளையமகன் அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லெனின்’. முரளி கிஷோர் அபூர் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யஸ்ரீ போஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சுனில், சிவாஜி, ராம்கி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் மனம் எண்டர்பிரைசஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஜுலை 10 ஆம் தேதி வெளியான இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 61.1 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.




