பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்..!

சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலையில் நடந்து சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை வியாசர்பாடியில் புதிதாக கட்டப்பட்ட பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்காக பெரம்பூர் தொகுதிக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ இருக்கையில் அமர்ந்து, கோப்புகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்த அவர், பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருந்து சல்மா நகர் ரேஷ்ன் கடைக்கு பொதுமக்களை பார்த்து வணங்கியவாறு சாலையில் நடந்து சென்றார். அவருக்கு வழியெங்கும் பூக்களை தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சல்மா நகர் ரேஷன் கடைக்குச் சென்ற அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 பேருக்கு மின்னணு அட்டைகள், ரேஷன் பொருட்களை வழங்கி 73,000 புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.