ஜூலை 16-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதம்..!

வரும் ஜூலை 16-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக தவெக அரசு பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் வரும் ஜூலை 16-அம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த பட்ஜெட் தாக்கலில் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்க்கப்படுகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.