சென்னையில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து எம்.எல்.ஏ இருக்கையில் அமர்ந்து, கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்த அவர், பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருந்து சல்மா நகர் வரை நடந்து சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு 73,000 புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து வியாசர்பாடியில் உள்ள மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அப்போது மின்சாரப் பேருந்தில் அமர்ந்து ஆய்வு மேற்க்லொண்டார். 24 மணி நேர சார்ஜ் கட்டமைப்பு வசதி கொண்ட வியாசர்பாடி பணிமனையில் 140 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது.




