லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிடமாற்றம்!

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருணை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததில் இருந்து பல்வேறு துறைகளிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது தற்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழல் கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சி. மகேஸ்வரி ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையை கூடுதலாக கவனிப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண் பொறுப்பேற்று சில வாரங்களே ஆன நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.