“தூய நரையிலும் காதல் மலருதே” – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

“தூய நரையிலும் காதல் மலருதே”  என ட்விட்டர் பக்கத்தில் திருமண நாளன்று தனது மனைவிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

“தூய நரையிலும் காதல் மலருதே”  என ட்விட்டர் பக்கத்தில் திருமண நாளன்று தனது மனைவிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பவர் செஞ்சி மஸ்தான். திருமண நாளான இன்று தனது மனைவிக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தூய நரையிலும் காதல் மலருதே” எனும் வாக்கியத்துடன் அந்த  வாழ்த்து துவங்குகிறது.

இதனையும் படியுங்கள்: தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் எழுதியுள்ள வாழ்த்துக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

“தூய நரையிலும் காதல் மலருதே”

வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல காரணங்களைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் உங்களைப் போன்ற விலைமதிப்பற்ற பரிசை வாழ்க்கை எனக்கு வழங்கியதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

“இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அன்புள்ள மனைவி”

 

https://twitter.com/GingeeMasthan/status/1632592490846101505

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.