கிரீஸ் ரயில் விபத்து: ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம்

கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணமானவர்களைக் கண்டித்து ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 350 பயணிகளுடன்…

கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணமானவர்களைக் கண்டித்து ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 350 பயணிகளுடன் ரயில் பயணிகள் ரயில் புறப்பட்டுள்ளது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. முதல் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்துகுள்ளான ரயிலை ஹெலனிக் என்ற தனியார் நிறுவனம் இயக்கியது தெரியவந்துள்ளது. இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சந்தேகித்துள்ளனர்.

இதையும் படிக்க: திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரயிலை சிவப்பு சிக்னலை கடந்து செல்லக் கூறியதாக ஆடியோ பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ஸ்டேஷன் மாஸ்டர் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்துக்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறி ஏராளமானோர் பேரணியாகச் சென்றனர். கிரீஸில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏதென்ஸில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் திடீரென சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை போராட்டக்காரர்கள் வீசினர். இந்த சூழலில், ரயில் விபத்துக்கு அந்நாட்டு பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.