இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படமான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சிறுகதை ஒன்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி ஜனவரி 14ம் தேதி நிறைவடைந்தது.
இதனையும் படியுங்கள்: ”இந்தக் கூட்டணிக்காக நீண்ட நாள் காத்திருந்தேன்” – மனம் திறந்த அல்லு அர்ஜூன்

மேலும் இந்த படத்தில் நடித்துள்ள அதிதி பாலன் குறித்து அவர் தெரிவித்ததாவது..“‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் ஒரு முதன்மைப் பாத்திரத்திற்காக நிறைய நடிகர்களைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட ‘கண்மணி’ எனும் பாத்திரத்தில் அதிதி பாலன் நடிக்கிறார். அருவி படத்தின் ‘அருவி’ பாத்திரத்தை எவ்வாறு மறக்க இயலாதோ, அதைவிடக் கூடுதலான தாக்கத்தை இப்பாத்திரம் ஏற்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , இயக்குனர் பாரதிராஜா மற்றும் இப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
https://twitter.com/thankarbachan/status/1632604242656776193







