திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…

திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு விற்பனையை தடுப்பதற்காகவும் மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து காண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கிலியாண்டபுரம், ராம்ஜிநகர் போன்ற பகுதிகளில் சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் திருச்சி செந்தணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த செல்வம், காஜாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பூபதி, கருப்பையா ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

—-அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.