இலவசத்தை முழுவதுமாக பாஜக எதிர்க்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அங்கு பரப்புரை மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழின் சிறப்பு செய்தியாளர் வசந்திக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலவசத்தை முழுவதுமாக பாஜக எதிர்க்கவில்லை. இலவசம் அளிக்கும் அளவுக்கு அரசு நிதி தன்மையுடன் இருந்தால் பிரச்னை இல்லை. நிதி இல்லாத நிலைமையில் இலவசங்களை அள்ளித் தெளிப்பது அவசியமற்றது.
பிரதமர் மோடி நாளை வருகை தந்து பாஜக தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்த உள்ளார். பாஜக 140க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.