“சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!

மரபுகளை மாற்ற மாட்டோம், மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“Legislative traditions cannot be changed.. This is how it is in Tamil Nadu..” - Speaker Appavu categorically!

தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். ஆனால் அவர் தனது உரையை நிகழ்த்தாமலேயே பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். எனவே ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Tamil Nadu Legislative Assembly meeting!

பின்னர் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,

“ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் கூடியது. நாளை மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதனை தொடர்ந்து சனிக்கிழமை வரை நான்கு நாட்கள்  சட்டப்பேரவை நடைபெறும். முதல் 3 நாட்கள் கேள்வி நேரம் இருக்கும்.

அண்ணா பல்கலைக்கழக வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் பேசும்போது தான் பதாகைகளைக் காட்டினர். நானோ, முதலமைச்சரோ பேசிய போது பதாகையை காண்பிக்கவில்லை. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வெளியேற்றினோம். 1995ல் முன்னாள் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஆளுநர் நியமிக்க வேண்டும் எனில் தன்னிடம் கேட்க வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களால் மட்டுமே அவையில் கருத்து சொல்ல முடியும். ஆளுநர் உரையை வாசிக்க விருப்பம் இல்லாததால் அவர் இப்படி செய்தார். முதல் கூட்டத்திற்கு ஆளுநரை அழைக்க வேண்டும் என்பது சம்பிரதாயமும், தமிழர்களுடைய பண்பும். அரசியலைப்பிற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவது தொடர்ந்து வருகிறது.

தமிழ்தாய் வாழ்த்து தமிழர்களின் அடையாளம். மரபுகளை மாற்ற மாட்டோம் மாற்ற முடியாது. தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது மத்திய அரசு ஆட்சி செய்யும் இடத்தில் இப்படி உள்ளதா? ஆளுநர் தான் மதசார்பற்ற நாடு என பொதுவெளியில் கூறினார். ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பை காட்டியதால் வெளியேற்றினோம். போட்ட தகராறில் தொழில்நுட்ப கோளாறு இருக்கக்கூடும் என நினைக்கிறேன்”

இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.