நாகப்பட்டினம் அவுரி திடலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பாத்திமா ஃபர்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது பேசியவர், “பாஜக காங்கிரஸ் பொருளாதார, கல்வி, பாதுகாப்பு கொள்கை ஒன்று தான். தேசிய இனங்களில் உரிமை பறிப்பதில் இரண்டு பேரும் ஒன்று தான்.
ராமர் கோயில் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அறிக்கையும், ஆர்எஸ்எஸ் தலைவர் கொடுத்த அறிக்கை ஒரு எழுத்துக்கூட மாறாது ஒரே மாதிரி இருக்கும். காங்கிரஸ் கட்சி தீவை தாரை வார்த்த பொழுது வேடிக்கை பார்த்தது திமுக. பாதிக்கப்பட்டு நிற்பது நாம் தான். கொடுத்தது, கொடுத்ததா என்று சொல்வதற்காக காங்கிரசும், பிஜேபி வர வேண்டுமா.
காவேரியில் ஒரு சொட்டு தண்ணீர் தமிழர்களுக்கு தர முடியாது என்று சொல்கிறது காங்கிரஸ். திமுக கூட்டு வைத்து தூக்கி சுமக்கிறது. திராவிடத்தை குப்பையில் போட்டு கொளுத்த வேண்டும். உலகில் பல சிறு நாடுகள் பஞ்சம் பசி இல்லாமல் வாழ்கின்றது. இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எங்கள் சிந்தனை இந்த நாட்டை எப்படி சிறந்த நாடாக மாற்றுவது என்பது மட்டும் தான். கட்டணம் இல்லாமல் தரமான கல்வி வழங்கப்படும். சிறந்த மருத்துவம் விலையில்லாமல் வழங்கப்படும். தூய்மையான குடிநீர் விளையாமல் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.







