முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

’தடுப்பூசியே போடலை.. சர்டிபிகேட் வந்தாச்சு’: கிர்ரான இளைஞர்

தடுப்பூசி குளறுபடிகளுக்கு பஞ்சமே இல்லை. முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவேக்சின் பஞ்சாயத்துகள் வட மாநிலங்களில் தாறுமாறாக நடந்தன. பிறகு ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் போட்ட புகார்களும் செய்தியாகி இருந்தன. இப்போது தடுப்பூசி போடாதவருக்குப் போட்டதாக சர்டிபிகேட் வந்து ஷாக் கொடுத்திருக்கிறது, கேரளாவில்!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கும்பாராவைச் சேர்ந்தவர் சுனேஷ் ஜோசப். இவருக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி, ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருக்கிறீர்கள், அதற்கான சான்றிதழை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆச்சரியமடைந்த அவர், தான் தடுப்பூசி போடவே இல்லையே, பிறகு எப்படி? என்று யோசித்தார்.

கோ-வின் தளத்தில் செக் பண்ணலாம் என்று பார்த்தால், அதில் அவர் பெயருடன் கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டதாக ஆதாரத்துடன் சொல்லியது தளம். உடனடியாக அதில் இருந்து அந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்தார். அதில் அவருடைய பாஸ்போர்ட் எண் உட்பட அனைத்தும் பக்காவாக இருந்தன. அந்த தடுப்பூசி, ஹரியானாவின் குர்கானில் உள்ள பார்லா ஆரம்ப சுகாதார மையத்தில் போடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முறையாக புகார் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சுனேஷ் ஜோசப். இதுபற்றி மாவட்ட தடுப்பூசிக்கான அதிகாரி டி.மோகன்தாஸிடம் கேட்டபோது, போலியான தொலைபேசி எண்களை கொடுத்து ஊசி போடுவதாக கூறப்படுகின்றன. முறையான புகார்கள் வந்தால், மாநில சுகாதாரத்துறைக்கு தெரிவிப்போம். அவர்கள் முறையான விசாரணை நடத்துவார்கள் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

Saravana Kumar

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நல்லடக்கம்!

Halley karthi

கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின்

Ezhilarasan