கரூரில் உள்ள வராஹி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி திமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறையினர் அவரது வீடு, அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையை தொடர்ந்து நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதுடன், அதற்காக விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக வழக்கறிஞர் கோபால் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி
கரூரில் புகழ்பெற்ற வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பிராத்தனை செய்தனர். இதில் பல்வேறு திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.
வேந்தன்







