திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோயில்
உண்டியலில் ரூ.47 லட்சத்து 68 ஆயிரம் காணிக்கையாக
கிடைக்கப் பெற்றதாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான,
ஆரணி அடுத்த படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயி தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை என்னும் பணிகள் நடந்தது.
கோயிலில் வைக்கப்பட்டிருந்த 6 உண்டியல்களிலும் கோயிலில் பணிபுரியும், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு காணிக்கைகளை எண்ணினர். இதில் ரொக்கப் பணமாக 47.68,387 ரூபாய் கிடைத்தது.
மேலும், 630 கிராம் தங்கம் மற்றும் 1050 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகள்
பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகளை
மாவட்ட இந்து சமய அறநிலை துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,
படவேடு ரேணுகாம்பாள் ஆலய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது .
கு. பாலமுருகன்







