கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

கரூர் வேலுசாமிப்புரத்தில் தவெக சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முதலில் பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆகியோரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் தவெக தலைவர் விஜயை இருமுறை டெல்லி அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ  அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்ப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.