இந்திய அடவர் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்தியா-அயர்லாந்து இடையைலான முதல் டி20 போட்டி பெல்பாஸ்ட் சிவில்சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக செயல் பட உள்ளார். மேலும் ஐபிஎல்-ல் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்த 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அணியில் இடம் பிடித்துள்ளது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இது தவிற சஞ்சு சாம்சன், திலக் வர்மா, இஷன் கிஷன், அபிஷேக் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடி வருவதாலும், எதிர்வரும் சர்வதேச தொடர்களுக்குத் தயாராகும் வகையிலும், அவரது பணிச்சுமையைக் குறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உத்தேச அணி விவரம்:
இந்தியா: சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா/ வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய்/பிரசித் கிருஷ்ணா/ பிரின்ஸ் யாதவ்
அயர்லாந்து: டிம் டெக்டர், ராஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் (wk), பென் கலிட்ஸ், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், மேத்யூ ஹம்ப்ரேஸ், மாட் ஹோலார்ட், ரூபன் வில்லியம்ஸ், ஜெய் மூன்ட்ரா




