மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன். 27) நடைபெற உள்ளது. இக்கூட்டம் அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது.
தமிழ் நாடு சட்டமன்றத்தேர்தல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதிமுக 2017 முதல் திமுக கூட்டணியில் நீடித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொடரலாமா, இல்லை மாற்றுக் கட்சியின் இணையலாமா என்பது குறித்து நாளை பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உயர்நிலை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், தீர்மானங்களை வாசிப்பது குறித்தும், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.




