முக்கியச் செய்திகள் தமிழகம்

கருணாநிதி பிறந்த நாள் – அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட துறையினர் வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் 99-வது பிறந்தநாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

 

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கருணாநிதி திரைத்துறை, அரசியல், எழுத்தாளர் என பண்முக துறைகளிலும் தலைவராகவே விளங்கியதால், அவரது பிறந்த நாளுக்கு கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில்,

கருணாநிதி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 80 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் – தமிழர் என உழைத்து உயர்ந்தவர் தலைவர் கருணாநிதி என்றும், திராவிடக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த அவரது வாழ்க்கை, வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடிய வரலாறாகும் என தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எந்நாளும் எண்ணுகிறேன், எந்நாளும் எண்ணுகிறேன் என கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

” அஞ்சுகத்தாயின் ஒரே மகன் ஆகையால் நீ ஒன்றானவன்
கருப்பென்றும், சிவப்பென்றும் இரண்டானவன்
பிறந்த நாளால் மூன்றானவன்
தியாகராயர் – பெரியார் – அண்ணா – கலைஞர் – என்ற வரலாற்று வரிசையில் நான்கானவன்
தமிழ்நாட்டு முதலமைச்சராக ஐந்து முறை ஆண்டதால் ஐந்தானவன்
எமக்கு இனிப்பு, இந்திக்கு கசப்பு, ஏழைக்கு உப்பு, வயிற்றில் கரைத்ததால் எதிரிக்கு புளிப்பு
வாதத்தில் உறைப்பு பித்தம் நீக்கும் துவர்ப்பு அறுவகை சுவைகளால் ஆறானவன்
வாரமெல்லாம் செய்தியானதால் ஏழானவன்
திசையெல்லாம் இசைப்பட வாழ்ந்ததால் எட்டானவன்
கிரகங்கலெல்லாம் சுற்றி வந்த சூரியன் என்பதால் நீ நவமானவன்
அள்ளி கொடுத்த முரசொலி விருதால் நீ லட்சமானவன்
எழுத்தாளர்களுக்கு கொட்டிக் கொடுத்ததால் நீ கோடியானவன்
உன்னை எண்ணங்களாலும் சிந்திக்கலாம்
எண்களாலும் சிந்திக்கலாம் ”

என வைரத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
கருணாநிதி தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர். அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி. எளிய மக்களின் பார்த்தசாரதி. அவர் புகழ் நீடு வாழ்க!! என தெரிவித்துள்ளார்.

 

பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசும் பேசு, கருணாநிதியைம்
ராமதாசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மிகவும் பிடித்த தலைவர் கருணாநிதி என்றும் இந்தியாவில் தலை சிறந்த தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில், எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கருணாநிதியை பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கருணாநிதியின் புகழ் என்றும் அழியாதது, இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர். அண்ணாவுடன் இணைந்து கருணாநிதியும் ஆவார். கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும், அவரது பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

 

நடிகர் சிவக்குமார் கருணாநிதியை பற்றி நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது என தெரிவித்தார்.

இதனிடையே, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவர் விரும்பிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலை, சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்

EZHILARASAN D

’தீ தளபதி’ – இணையவாசிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாரிசு படத்தின் 2வது பாடல்

EZHILARASAN D

வெளியானது பொன்னியின் செல்வனின் சோழா சோழா பாடல்

EZHILARASAN D