காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை லாட்டரி பழக்கத்திற்கும் மதுப்பழக்கத்திற்கும் இழந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ள போதிலும் வெளி மாநில லாட்டரிகளை கம்ப்யூட்டர் செல்போன் மூலம் பல்வேறு பகுதிகளில் இந்த தொழிலாளிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், காட்டன் சூதாட்டம் நள்ளிரவு வரை
நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதில் 70 சதவீதத்தை இழந்து விடுவதாக குடும்ப பெண்கள் பெரும் புகார் எழுப்பிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அதிரடி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

—-.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.