விருதுநகரில் புதிய அறக்கட்டளை – அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்!

காரியாபட்டி அருகே நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையாவின் தந்தை நினைவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய அறக்கட்டளையை அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் நகராட்சி நிர்வாக…

காரியாபட்டி அருகே நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையாவின் தந்தை நினைவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய அறக்கட்டளையை
அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் நகராட்சி
நிர்வாக இயக்குநர் பொன்னையாவின் தந்தை கூ.பால்சாமியின் 
இரண்டாம்‌ ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, பால்சாமித்தேவரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தார்.

மேலும் கிராமப்புற விவசாயிகள், மற்றும் ஏழை மாணவர்கள் பயன்பெரும் வகையில்
புதியதாக துவங்கப்பட்ட பால்சாமி – ராஜம்மாள் தகவல்உதவி மற்றும் கல்வி அறக்கட்டளையை அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்.

மேலும் கல்வி உதவித் தொகையாக 20 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நன்கொடையாகவும், விவசாயிகளுக்கு தேவையான உபகரண பொருட்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள், பெண்களுக்காக தையல்
இயந்திரம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை இயக்குநர் பொன்னையா, மதுரை சட்டமன்ற
உறுப்பினர் தளபதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.