திருச்சி பழைய பால் பண்ணை அருகே, பழைய கார்களை உடைத்து
உதிரி பாகங்களை பிரித்தெடுக்கும் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பழைய பால் பண்ணை அருகே ,
ஜாஃபர் என்பவர் பழைய காரை உடைத்தெடுத்து அதன் உதிரி பாகங்களை
விற்பனை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் பணியாளர்கள் காரை உடைத்து உதிரி பாகங்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அருகில் வெல்டிங் பற்ற வைத்து கொண்டிருந்த போது, எதிர்பாராத
விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் கார்
உதிரி பாகங்கள் கொளுந்து விட்டு எரிய துவங்கி, அந்த பகுதியே புகை மூட்டமாக
காணப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பணியாளர்கள் தீயணைப்புத்
துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்தீயை அணைத்தனர்.
இதில், சுமார் 2 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் உதிரி பாகங்கள் முற்றிலுமாக
எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல்
நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
—கு.பாலமுருகன்







