கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (21.06.2024) ஆலோசனை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 114-க்கும்…

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (21.06.2024) ஆலோசனை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 114-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்ததோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் மற்றும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை முதல்வர் முகாம் இல்லத்தில்  இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக அவர் மேற்கொண்ட ஆலோசனையில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.