முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

’ஓபிஎஸ் பக்கமே தர்மம் உள்ளது என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ – மனோஜ் பாண்டியன்

ஓபிஎஸ் பக்கமே தர்மம் இருக்கிறது என்பதை அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால மனு மீதான தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என  நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள்,  பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன், “அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பாதுகாத்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தும் விதமாக இந்த நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தில் கையொப்பமிட அதிகாரம் அளிக்கப்படவில்லை. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சட்டவிரோதமாக நீக்கப்பட்ட 4 பேர் கூட, தங்களது கருத்துக்களையும், முடிவையும் தெரிவிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் பக்கமே தர்மம் இருக்கிறது என்பதை இன்றைய தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இன்று எந்த தரப்பும் இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று இன்றைய சூழலில் எடுத்துக் கொண்டால் ஒன்று ஓபிஎஸ், மற்றொன்று இபிஎஸ். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் கையெழுத்திடுவேன் என்று சொன்னதற்கு சாதகமாக இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பொதுச்செயலாளர் என்று கடந்த சில மாதங்களாக கூறிக்கொண்டு எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று இபிஎஸ் கூறுவதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்களுக்கு அந்த அதிகாரத்தை நீதிமன்றம் அளிக்கவில்லை. ஒருங்கிணைந்த அதிமுகவே ஓபிஎஸ்-ன் நோக்கம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

8 வழி சாலையை தமிழக அரசு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது- எல்.முருகன்

G SaravanaKumar

பேரிடர் கால மீட்பு பயிற்சி; நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

G SaravanaKumar

எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது

Jeba Arul Robinson