அடுத்த ஆண்டுக்குள் 7000 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்வே தடங்கள் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இதில் வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்வு, பெண்களுக்கான சேமிப்பு திட்டம், தங்கத்துக்கான இறக்குமதி உயர்வு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. ரயில்வே துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இன்று ரயில்வே திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2014ம் ஆண்டுக்கு முன் ஒரு நாளைக்கு 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தடங்கள் அமைக்கப்பட்டன. கடந்த் ஆண்டு ஒரு நாளைக்கு 12 கிலோமீட்டர் வீதம் 4500 கிலோமீட்டருக்கு புதிய ரயில்வே தடங்கள் அமைத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் 7000 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரயில்வே தடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை ஐசிஎப் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வாரந்தோறும் 3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். வரும் நிதியாண்டு முதல் ஹரியாணா மாநிலம் சோனபட், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, மஹாராஷ்டிரா மாநிலம் லத்துர் ஆகிய 3 இடங்களில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும். நமது நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவு இதன் மூலம் சாத்தியமாகும். நாடு முழுவதும் 85 சதவீத வழித்தடங்கள் மின்மயமக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.