முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பின்னரே பேனா நினைவு சின்னம்- தமிழ்நாடு அரசு உறுதி

அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும்,
ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல்
விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில்
ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டு உள்ளது. அதில், கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா சிலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனா அமைக்க அனுமதிக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பங்கள்
அளிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அனைத்து துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் தான் பணிகள் தொடங்கப்படும் எனவும் பொதுப்பணி துறையின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’இது எனக்கு மறுபிறவி’: நடிகர் வடிவேலு மகிழ்ச்சி

Gayathri Venkatesan

“ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்” – ராஜ்நாத் சிங்

Niruban Chakkaaravarthi

சேடப்பட்டி முத்தையா மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

EZHILARASAN D