ஆத்தூர் தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு
இடங்களில் மக்கள் தமிழர்களின் பாரம்பரிய போட்டிகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா,
வழுக்கு மரம் ஏறுதல் என பல்வேறு போட்டிகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி
மகிழ்ந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி, கூடமலை என பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்
மற்றும் பார்வையாளர்கள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போலீசார்
அனுமதியின்றி தம்மம்பட்டி காவல் நிலையம் எதிரே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில்
நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளை ஒன்று
தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சந்துரு என்கிற மாடுபிடி வீரரை
முட்டியதில் அவர் கழுத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்
சேலம் அரசு மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.
கானும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு மற்றும் போலீசார் அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,