பெங்களூரு சாலையில் இரு சக்கர வாகனத்தில் 71 வயது முதியவரை இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஷாகில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்த போது, 71 வயது முதியவர் முத்தப்பா ஓட்டி வந்த எஸ்யுவி வாகனம் மீது மோதினார். பின்பு முதியவர் முத்தப்பா வாகனம் மோதியது குறித்து ஷாகிலிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். பின்பு ஷாகில் தப்பிக்காதபடி அவருடைய இரு சக்கர வாகனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனால் இதுபற்றி கவலைபடாத முதியவர் முத்தப்பா தனது வாகனத்தை பிடித்திருக்கிறார் என்று தெரிந்தும் ஷாகில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். மஹடி சாலையில் முத்தப்பாவை இழுத்துக் கொண்டே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு தனது வாகனத்தில் சென்றுள்ளார். இதனால் முத்தப்பாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாலையில் முத்தப்பா தொங்கி கொண்டு செல்லும் வீடியோ வைரலானது. அதன்பிறகு ஷாகிலை காவல்துறையினர் கைது செய்தனர். முத்தப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து முத்தப்பா கூறுகையில், “அந்த இளைஞர் மிக திமிர் பிடித்தவர். என்னுடைய காரை இடித்தபிறகு தப்பிக்க முயன்றார். நான் விடவில்லை. பாம்பு தொங்குவது போல் அவர் வாகனத்தில் தொங்கி கொண்டு சென்றேன். சில இளைஞர்கள் அந்த இளைஞரை பின் தொடர்ந்து நிறுத்தினர். பின்பு ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் சேர்ந்து அவரை பிடித்தனர்” என்று தெரிவித்தார்.