காணும் பொங்கலை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
சென்னையில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று மகிழ்சியாக நேரத்தை செலவிடுவர். அந்த வகையில் இந்தாண்டும் ஏராளமான மக்கள், மெரினா கடற்கரைக்கு சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்தாண்டுகளில் பண்டிகை நாட்களில் கடற்கரையில் குளிக்க அனுமதிப்பதால் உயிர் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மெரினா கடற்கரையில் சென்று கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடல் அலைகள் அருகே செல்லாத வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர். கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மக்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல், கடற்கரைக்கு செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக, காவல் கட்டுப்பாட்டு அறைகள், சர்வீஸ் சாலைகளில் 11 காவல் உதவி மையங்கள், கடற்பரப்பு மேல் 15 உயர் கண்காணிப்பு கோபுரங்கள், ட்ரோன் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட கண்காணிப்பு பணிகள் செய்யப்பட்டன. அதேபோல், குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க, 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கையில், பெற்றோர்களின் விபரங்கள் அடங்கிய அடையாள டோக்கன் கட்டப்பட்டன.
மேலும், உயர் கோபுரங்கள் மீது 3 காவலர்கள் அடங்கிய குழுக்கள் பை நாக்குலர் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை கண்காணித்தனர். இந்த கண்காணிப்பு பணியில், காவல்துறை, கடலோர காவல் படை, கடலோர காவல் குழு, தீயணைப்பு துறை மற்றும் குதிரைப்படை வீரர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்