முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை

சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் அண்ணாசாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென ஒரு பகுதி கட்டட சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தது. இதனால், அவர்கள் இருவருமே இடிப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் 20 நிமிடமாக போராடி, இரு பெண்களையும் படுகாயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

உடனடியாக இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த பெண், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரியா என்பதும், சென்னையில் தங்கி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் கட்டடம் இடிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகர், ஆபரேட்டர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விதிமுறை மீறல்.. 3 கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வருடம் தடை

Gayathri Venkatesan

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்

Halley Karthik

ரூ. 20,000 சம்பளத்தில் லேப் டெக்னிஷியன் வேலை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Halley Karthik