முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள சிவபிரசாத் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம்காண்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக சிவபிரசாத் உள்ளார். தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிகுழுவில் இடம்பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

Halley Karthik

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

G SaravanaKumar

”திமுக, அதிமுகவுக்கு மாற்று, தேமுதிக தான்”- விஜய பிரபாகரன்!

Jayapriya