வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்க்கில் அதிகபட்ச வரம்பிற்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை பலர் முறையாகப் பராமரிக்காமல் இருந்து வருவதால், அவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிவது போன்ற சம்பவங்கள் அண்மையில் பல இடங்களில் நடைபெற்றதை செய்திகள் மூலம் அறிய முடிந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்கையும், பெட்ரோல் நிரப்பும் அளவையும் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சந்தேகம் அனைவரிடத்திலும் எழும். வெயில் காலங்களில் அதிகமான வெப்பநிலை இருக்கக்கூடும் என்பதால், பெட்ரோல் டேங்கின் அதிகபட்ச வரம்பிற்குள் பெட்ரோலை நிரப்பக் கூடாது. அவ்வாறு நிரப்பினால், பெட்ரோல் டேங்கில் வெடிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
எனவே வாகனத்தில், பாதி எரிபொருளை நிரப்பி, காற்று வருவதற்கு இடமளிக்கவும். இந்த வாரத்தில் மட்டும், பெட்ரோலை அதிகமாக நிரப்பியதால், 5 வெடி விபத்துகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் ஒரு முறையாவது, பெட்ரோல் டேங்கை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியே வரவிட வேண்டும். இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றினால், பெட்ரோல் டேங்க்கால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும்.