அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள…

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், கடுங்குளிர் வாட்டியதால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்.

இந்நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மீண்டும் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சுற்றி கடும் பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும் பனி சூழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் – ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது 

இந்நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக ஆயிரத்து முன்னூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் விமான நிலையங்களில், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பனிப்புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளும், வெளிநாட்டுப் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பனிப்புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.