முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்

மூணாறு நயக்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் படையப்பா காட்டு யானை நுழைந்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மூணாறு நயக்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் நுழைந்த படையப்பா
காட்டுயானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானையை விரட்ட முயன்ற நாயை தெறித்து ஓட விட்ட படையப்பா  யானையின் வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் விடியோ அனைவராலும் வெகுவாக பகிரப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா என்ற  ஆண் காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட்
பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சாதரணமாக
இந்த யானை உலா வரும்.

இதனையும் படியுங்கள்: அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட  இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இந்த
படையப்பா யானை உலா வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக படையப்பா யானை சாலையோரக்கடைகளை சூரையாடி வருவதுடன், சாலையில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நயக்காடு எஸ்டேட் பகுதியில் நுழைந்த படையப்பா யானை அந்த பகுதியில் உள்ள  குடியிருப்பு அருகே வந்ததை பார்த்து அப்பகுதி
மக்கள் சத்தம்போட்டு கூச்சல் எழுப்பினர். இதனால் யானை  கோபமடைந்து அவர்களை
விரட்டியது.

இதனையும் படியுங்கள்: புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் – ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது

அப்போது அந்த பகுதியில் இருந்த நாய் ஒன்று யானையை நோக்கி குரைத்துக் கொண்டு யானையை விரட்ட முற்பட்டது. ஆனால் அந்த யானை அதற்கெல்லாம் அசராமல் நாயை தனது பாணியில் மிரட்டி, பிலிறியது. அதனையடுத்து அந்த நாய் வந்த வழியே தெறித்து ஓடியது. இந்த காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறார்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாட்டில் 73% நிறைவு

Halley Karthik

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D

MBBS படிப்புகளுக்கான கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D