#IPL2026 | பஞ்சாபை எதிர்கொள்ளும் சென்னை… இன்று களமிறங்குவாரா தோனி..?

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2026 தொடரில் கௌகாத்தியில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் சென்னை அணி, ராஜஸ்தானுடன் மோதியது. நாதன் எல்லீஸ் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் முன்னாள் சென்னை அணி கேப்டன் எம். எஸ். தோனி, அதிரடி ஆட்டகாரர் டெவால்ட் பிரவேஸ் காயம் காரணமாக இப்போட்டியில் கலந்து கொள்ள வில்லை.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பேட்டர்களின் தடுமாற்றத்தால் 127 ரன்களுக்கு சுருண்டது. டி 20 உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளியிப்படுத்திய சஞ்சு சாம்சன் சென்னை அணியிக்கான தனது முதல் போட்டியில் ரசிகரகளின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறினார். அதே 2026 ஜுனியர் உலககோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டனான செயல்பட்ட ஆயுஷ் மாத்ரே-வும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அனைவரின் புருவஙகளையும் உயர வைத்த கார்த்திக் ஷர்மாவும் சென்னை அணியின் முதல் போட்டியில் சோபிக்க தவறினர். இறுதி ஓவர்களில் ஜேமி ஓவர்டன் விளாசிய 43 ரன்கள் சென்னை அணி, 127 என்கிற கௌரவமான இலக்கை நிர்ணயிக்க உதவியது.

ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்சியின் அதிரடி அரை சதத்தில் 12 ஓவரக்ளிலேயே அந்த அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே சென்னை அணி தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

வெற்றிக் கணக்கை தொடங்குமா சென்னை…? 

இந்த நிலையில் இன்று  நடைபெற உள்ள தனது இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னை. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

போட்டிக்கு முன்னதாக சென்னை அணி வெளியிட்ட வீடியோக்களில் எம்.எஸ். தோனி பயிறசி செய்வதை காணமுடிந்தது. இதனால் இப்போட்டியில் அவர் களமிறங்குவாரா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை அணி :  ருதுராஜ் கெய்க்வாட் (கே),  சஞ்சு சாம்சன் (வி.கீ), ஆயுஷ் மத்ரே, மாட் ஷார்ட், ஷிவம் துபே, சர்பராஸ் கான், கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, அன்ஷுல் காம்போஜ்

பஞ்சாப் அணி : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (வி.கீ), கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கே),  நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.