புனித வெள்ளி ; இயேசு பிரானின் தியாகங்களை நினைவு கூர்கிறேன் – எடப்பாடி பழனிசாமி பதிவு.!

புனிதவெள்ளி தினத்தில் இயேசு பிரானின் தியாகங்களையும், துணிவையும் நினைவு கூறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்வர். அந்த வகையில் இந்த ஆண்டு புனித வெள்ளி இன்று ஏப்.03 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழ் நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்கும் இயேசு பிரான், அனைத்து மனிதர்களின் பாவங்களையும், துயரங்களையும் தூக்கிச் சுமந்து சிலுவை மரத்தில் அருள் மலராய் பூத்த, தியாக திருநாளான புனிதவெள்ளி தினத்தில் இயேசு பிரானின் தியாகங்களையும், துணிவையும் நினைவு கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.