உளுந்தூர்பேட்டை: சொகு பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளனாதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் என்ற…

உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளனாதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னை-திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் ஆசனூர் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென இருசக்கரம் வாகனம் இடையே வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சடனாக பிரேக் அடித்தார்.

இதையும் படிக்கவும் : வள்ளல் மாதிரி வாழ்ந்த மனிதர் மயில்சாமி- நடிகர் தம்பி ராமையா உருக்கம்

இதில் நிலை தடுமாறிய சொகுசு பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி தல குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் சிசிடி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.