இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி பிரதீப் குருல்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டிஆர்டிஓ என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆய்வகம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ளது. இங்கு இயக்குனராக பணியாற்றி வந்த பிரதீப் குருல்கர், பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு ஏஜெண்டுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர், கடந்த 3 ஆம் தேதி மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் விஞ்ஞானி பிரதீப்பிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள், பெண்களைப் பயன்படுத்தி ஆபாசமாக பேச வைத்து விஞ்ஞானி பிரதீப்பை அவர்களது வலையில் சிக்கவைத்துள்ளது தெரியவந்தது. அதன்மூலம் அவர்கள் விஞ்ஞானியிடம் இருந்து இந்திய ராணுவ ரகசியங்களை கறந்ததும் அம்பலமானது.
இதையும் படியுங்கள் : சேலத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர் – நியூஸ்7 தமிழ் வெளியிட்ட பிரத்யேக வீடியோ…!
இந்நிலையில் விசாரணைக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, விஞ்ஞானி பிரதீப்பை நேற்று புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விஞ்ஞானியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக பிரதீப் தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் அதற்கான மருந்து மற்றும் மாத்திரைகளை சிறைக்கு எடுத்துச் செல்ல அனுமதி கோரிய நிலையில், அதற்கு புனே நீதிமன்றம் அனுமதி அளித்தது.