முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கத்துடன் காணப் படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,31,74,954 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,23,42,299 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில், இதுவரை 72,37,84,586 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,58,491 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

வடமாநில ஊழியர்களுக்கு பணிநிரந்தரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிரண்பேடி

Niruban Chakkaaravarthi

IPL2021 – ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற சென்னை அணி!

Jeba Arul Robinson

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்- உச்சநீதிமன்றம்!

Jayapriya