வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் மீண்டும் நீட்டித்துள்ளது.
வருமான வரித்துறைக்காக, இன்போசிஸ் நிறுவனம் புதிதாக இணையதளம் ஒன்றை
உருவாக்கி இருந்தது. இதில் தொழில்நுட்ப கோளாறுகள் நீடிப்பதால், 2021-2022 ஆம்
ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி
வரிகள் வாரியம் மீண்டும் நீட்டித்துள்ளது.
புதிய இணையதளப் பிரச்சனை தொடர்பாக, ஏற்கனவே வருமான வரி கணக்கு தாக்கல்
செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது
டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2020-2021
நிதியாண்டுக்கான (2021-2022 ஆய்வு ஆண்டு) வருமான வரித் தாக்கலில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான தேதியை டிசம்பா் 31-வரை நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்துள்ளது. நிறுவனங்களுக்கான
கால்கெடுவை நவம்பா் 30-ல் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.







